Thiruvilaiyadalgal

14c. வளை எறிந்தது!

14 (c). வளை எறிந்தது!

கடும் சினம் கொண்ட இந்திரன்
கொடும் பகைவனாக மாறினான்!
“விடுவிக்கவேண்டும் மேகங்களை!”
எடுத்தான் படை பாண்டியர்களின் மீது.

கடும் போர் ஒன்று நிகழ்ந்தது அங்கே!
அடுத்து வந்த அமரர்க்கும் வீரர்க்கும்;
எடுத்த வேல் முருகனது என்றால்
அடுத்து வந்த படை என்ன ஆகும்?

ஓட்டம் பிடித்து இந்திரன் படை,
வாட்டம் அடைந்ததால் சமரில்!
தனி ஒருவனாக மாட்டிக்கொண்டான்
இனிச் செய்வதறியாத இந்திரன்!

ஒருவருக்கு ஒருவர் என்ற படைநெறி
முறைப்படி தொடங்கியது உடனே
இருவர் மட்டுமே புரியக் கூடிய
சிறந்த, கடின, துவந்த யுத்தம்!

வச்சிராயுதம் தன்னிடம் இருக்க
அச்சம் கொள்வது வீண் என்றெண்ணி,
வச்சிராயுதத்தை எறிந்தான் இந்திரன்!
வச்சிராயுதத்தை எதிர்த்தது எது தெரியுமா?

உக்கிரன் சுழற்றி எறிந்தது அப்போது
மிக்காரில்லாத தந்தை தந்த வளையே!
வளை போன்றே கட்சி தந்தாலும் அது
விளைந்தது சக்ராயுதத்தின் அம்சமாக!

வளை தட்டி விட்டது வச்சிராயுதத்தை!
வளையின் நோக்கம் இந்திரன் தலையே !
தகர்க்க வேண்டியது இந்திரன் தலையை,
தகர்ததோ அவன் மணிமுடியை மட்டுமே!

முனிவரின் சாபம் பலித்துவிட்டது.
தனி ஆயுதமான பாண்டியன் திகிரி
தலைமுடியைத் தகர்த்து அழித்தது,
தலையைச் சிதறடிக்காமல் காத்தது.

தலைக்கு வந்த ஒரு தனி பெரும் ஆபத்து
தலை மகுடத்தை மட்டும் அழித்து ஏன்?
கடலெனப் பொங்கிய சிவனது கருணைக்
கடாக்ஷமே காத்தது இந்திரன் தலையை.

சிறைப்பட்ட மேகங்களை விடுவிக்குமாறு
சிறையிலிட்ட உக்கிரனை இந்திரன் வேண்ட,
“மாதம் மும்மாரிக்கு வாக்குத் தந்தால் தான்
மேகம் விடுதலை ஆகும்!” என்றான் உக்கிரன்.

இந்திரன் வாக்கை நம்பவில்லை உக்கிரன்.
தந்திரங்கள் பலப்பல புரிபவன் இந்திரன்!
தூதுவரும், ஓலைகளும் வீணாகப் போகவே,
ஏது செய்வதென ஆராய்ந்தான் இந்திரன்.

ஏக வீரன் என்னும் இந்திரனின் நண்பன்
ஏக மனத்துடன் தானே முன்வந்தான்!
“பிணையாக என்னை அடைத்து விட்டு
இணையில்லா மேகங்களை விட்டுவிடும்!”

விடுதலை ஆன மேகங்கள் உடனேயே
கிடுகிடு என உயரே எழும்பிச் சென்றன!
“கொடு! கொடு!” என்று வேண்டியவருக்கு
கொடுத்தது மாதம் தவறாது மும்மாரி!

ஆறுகள், குளங்கள், ஏரிகள், வாவிகள்,
நீரால் முற்றும் நிரம்பி வழியலாயின.
வறுமையும், வற்கடமும் மறைந்து போயின,
வளமையும், செழுமையும் கொழிக்கலாயின!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 14 (c).THROWING DISCUS AT INDRA

Indra became mad with anger! He became a bitter enemy of the Paandiya King. His only aim was to free the clouds- his servants for the prison of Ugravarman.

He lead an army on the Paandiya Kingdom. A fierce battle ensued. Ugran was the amsam of Lord Skanda. The Devas were defeated and took to their heels.

Indra was left all alone amidst the enemies. So now they fought one-to-one. A bout of wresting started between Indra and Ugravarman.

Indra thought it was pointless to wrestle when he could finish off Ugran with his vajraayutham. He threw the Vajrayutham at Ugran and Ugran threw the discus given by his father.

The discus knocked off the Vajrayutham and went straight for Indra’s head.

According to the Durvaasaa’s saapam it should have shattered Indra’s head to a thousand pieces but it merely shattered his crown. Indra was saved by the infinite compassion Lord Siva showered on him..

Indra did not give up!.He sent messages demanding the release of the clouds. Ugran knew that Indra was capable of playing many dirty tricks.

He did not trust Indra. Ekaveeran was Indra’s friend. He offered to become a hostage in the place of the clouds.

The clouds were finally released. They rose high up in the sky and started raining on Paandiya kingdom. All the rivers, ponds, lakes and tanks were overflowing with rainwater.

The famine and drought disappeared. Paandiya Kingdom became fertile and prosperous once again.

Leave a comment