Thiruvilaiyadalgal

62e. சிகித்சை அளித்தார்

# 62 (e). சிகித்சை அளித்தார்

முத்துப் பந்தல் அசைந்து நிழல் தர,
முத்துச் சிவிகையில் வந்தார் சம்பந்தர்;
ஒத்துக் கொண்ட மன்னனின் நோயை,
எத்தி உதைத்து விரட்டி விடுவதற்கு!

வழியெங்கிலும் மங்கலச் சின்னங்கள்,
வாசல்தோறும் துலங்கிய பூரணகும்பம்,
ஒளிவிடும் விளக்குகள், தூபப் புகை,
அளித்தன பிள்ளைக்கு அரிய நல்வரவு!

ரத்தின ஆசனத்தில் வந்து அமர்ந்தார்,
அத்தன் அருள்பெற்ற ஆளுடைப்பிள்ளை;
காழிப்பிள்ளையின் அருட்பார்வையினால்,
ஆவி திரும்பியது கூன் பாண்டியனுக்கு.

“பாவியேன் பிணி தீர்த்தருளும்!” எனக்
கோவலன் வேண்டினான் கரம் குவித்து.
மாயம் செய்ய வந்த சம்பந்தர் மீது,
கோபம் பொங்கியது சமணருக்கு!

“வலப்பக்கத்துச் சிகிச்சை இவருடையது!
இடப்பக்கத்துச் சிகிச்சை எங்களுடையது!”
பங்கு போட்டனர் மன்னன் உடலை,
பதிலுக்காகக் காத்திருக்கவில்லை.

தொடங்கி விட்டனர் தம் சிகிச்சைகளை,
இடப்புறத்தில் பாண்டியமன்னன் உடலில்,
அருக மந்திரத்தை உருப்போட்டனர்,
கமண்டல நீரைத் தெளித்து, மயில்பீலி!

வளர்ந்தது ஜுரவேகம் மேலும், மேலும்;
தளர்ந்துபோனான் மன்னன் மேன்மேலும்;
வறிதே அமர்ந்து, வெட்கம் அடைந்தனர்;
சிறிதும் பயனற்ற ஒரு சிகிச்சை தந்தவர்!

பையிலிருந்து எடுத்த திரு நீற்றைக்
கையினால் தடுத்தனர் மாய நீறு என்று!
செய்வது அறியாத சம்பந்தர் பெருமான்
செய்யச் சொன்னது இந்தச் செயலை!

“ஆலவாய் அண்ணல் மடைப்பள்ளி சென்று,
அள்ளிக்கொண்டு வருவீர் அந்தச்சாம்பலை!”
கையில் பெற்றுக் கொண்ட பஸ்மத்தை
மெய்யில் பூசினார் மிகவும் மென்மையாக.

“மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு”
என்று தொடங்கினார் திருநீற்றுப்பதிகத்தை!
மந்திரக் கோலைச் சுழற்றியதுபோல
மாயமாக மறைந்தது ஜுரம் வலப்புறம்!

பன்னீர் குழைத்த சந்தனக் கலவையை,
பரிவுடன் பூசியதுபோல மகிழ்ந்தான்;
“இன்னனும் தடவுங்கள் இடப்பக்கம்,
இன்னல்கள் தீர்த்து அருளுக” என்றான்!

ஈசனை பூசனை செய்து பின் தடவினார்
இடப்பக்கமும் மடைப்பள்ளி சாம்பலை!
ஜுரம் மறைந்து அவன் கூனும் நிமிர்ந்தது!
அரசன் இப்போது சௌந்தர்யபாண்டியன்.

காழிப் பிள்ளையின் கடாக்ஷம், ஸ்பரிசம்,
கனிவான சொற்கள், இனிய பாடல்கள்,
பஞ்சாக்ஷர உபதேசம் பெற்ற மன்னன்,
நெஞ்சில் சிவனைத் தாங்கினான் மீண்டும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 62. (E). THE TREATMENT.

The pearl canopy swayed beautifully. Sambandhar traveled in the pearl palanquin. He agreed to cure the king’s fever and sweep away Jainism.

The city stood well decorated. Poorna kumbam was placed in front of every house. The lamps were lit and the incense burnt as a sign of welcome.

Sambandhar sat on a gold throne studded with corundum. The very sight of the child prodigy assured the king that soon he would be cured.

“Please cure me sire!” he begged with his palms in anjali. The Jain gurus were angry that Sambandhar had come there to play some kind of magical tricks.

They told the king, “Let him treat your right side. We will treat the left side. Let us find out who is able to cure faster!”

They did not wait for the king’s reply but started sprinkling their holy water, chanting their mantra and used gently their peacock feather .

The fever seemed to increase. King’s suffering also increased. Then they sat quietly, ashamed of their futile attempt.

Sambandhar took the holy ash from his small bag. The Jain objected saying that it was magical in nature. Sambandhar ordered a servant to go to the kitchen in the temple and bring the ash of the burnt fire wood from the stove.

He gently applied it to the right side of the king’s body and sang the Thiru neetrup pathigam “manthiram aavathu neeru”
The fever reduced as if by a magic wand.

The king felt as cool and refreshed as if a paste of sandal in rose water had been applied to his body. He begged Sambandhar to treat his left side also.

What a miracle! The moment the ash from the stove was applied to his left side, the fever disappeared completely. So also the king’s hunchback. He became the most handsome king ever and got the tile Soundharya Paandian.

He got the sookshma panchaakshara upadesam from Sambandhar. His gentle touch, his kind words, his sweet songs changed the king’s mind completely.

He became a devotee of Siva and enshrined Him in his heart.

Leave a comment